கருவாட்டுக்கு என்றே தனிச் சந்தை கூடுகிறது தெரியுமா?

 

கருவாட்டுக்கு என்றே தனிச் சந்தை கூடுகிறது தெரியுமா?

இன்றல்ல,நேற்றல்ல நூறு வருடங்களுக்கு முன்பே தமிழகத்தின் முதல் கருவாட்டு சந்தை மயிலாடு துறையில் துவங்கப்பட்டு விட்டது.மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள சித்தர் காட்டில் இந்தச் சந்தை கூடுகிறது.ஒவ்வொரு பெயர்துவங்கி மறுநாள் ஞாயிறு மாலை வரை இந்த சந்தை நடக்கிறது.

karuvadu

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை,திருவாரூர், கடலூர் , நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்தும் கேரளத்தில் இருந்தும் மொத்த வியாபாரிகள் வருகிறார்கள். காலை ஆறுமணிக்குள் மொத்த வியாபாரிகள் தங்கள் வணிகத்தை முடித்துவிட்டு புறப்பட்டு விடுமிறார்கள்
அதற்கு பிறகு.சிறு வியாபாரிகள் வருகிறார்கள். பத்துமணிக்குப் பிறகு சில்லரை.வியாபாரம் மாலைவரை நடக்கிறது.ஒவ்வொரு வாரமும் 5000 க்கு மேபட்டோர் சந்தைக்கு வருவதாகவும்,ரூ 5 லட்சத்துக்கு மேல்.வியாபாரம் நடப்பதாகவும் சொல்கிறார்கள். நெத்திலி முதல் வஞ்சிரம் வரை அனைத்து வகையான கருவாடுகளும் இங்கே மிடைக்கின்றன.

karuvadu

கருவாட்டுச் சந்தை கூடும் இடம் ,இந்து சமய.அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என்பதால் அவர்கள் தரை வாடகை வசூலிக்கிறார்கள்.சனிக்கிழமை இரவே வந்து விடும் வியாபாரிகள் தங்க அங்கே எந்த வசதியும் இல்லை.அடிப்படை வசதிகளான குடி நீரும் ,கழிப்பிடமும்கூட இல்லை.எல்லாவற்றுக்கும் ரயில் நிலையத்தையே நம்பி இருக்கிறார்கள்
சந்தையில் கடைபோடும் வியாபாரிகள் அவர்களேதான் கூரை அமைத்துக் கொள்கிறார்கள்.
அறநிலையத்துறை அதிகாரிகள் கடைல்கு.30 ரூபாய் முதல் 50 ரூபாய்தாந் வசூலிக்கிறோம்,அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கூட எங்களிடம் நிதி ஆதாரம் இல்லை என்கிறார்கள்
ஒரு காலத்தில் பழைய சோறும் கூழும் குடித்த தமிழர்களுக்கு கருவாட்டின் அவசியமிருந்தது.இப்போது கருவாட்டின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. எவளவு மோசனான கருவாடாக இருந்தாலும் கோழித்தீவன தயாரிப்பாளர்கள் வாங்கிக் கொள்வதால் தரமான கருவாடு கிடைப்பதும் அரிதாகிக் கொண்டிருக்கிறது.அரசு இது போன்ற பழைமையான தொழிலை ஆதரிக்க வேண்டியது அவசியம்.