கரும்பு பயிரிடுவதை குறைத்தால் சர்க்கரை நோய் குறைந்துவிடும்: யோகி ஆலோசனை

 

கரும்பு பயிரிடுவதை குறைத்தால் சர்க்கரை நோய் குறைந்துவிடும்: யோகி ஆலோசனை

லக்னோ:  கரும்பு மட்டுமின்றி மற்ற பயிர்கள் உற்பத்தி மீதும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் என உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் பாக்பட்டில் நடைபெற்ற விழா ஒன்றில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது போசிய அவர், “தற்போது விவசாயிகள் கரும்பு உற்பத்தி மீது மட்டுமே ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதேபோல் காய்கறிகள் மற்றும் இதர பயிர்களிலும் கவனம் செலுத்திட வேண்டும். கரும்பு மட்டுமே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதே சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது” என பேசியுள்ளார்.

மேலும், அம்மாநில கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள 10 ஆயிரம் கோடி விரைவில் வழங்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.