கரும்புத் தோட்டத்தில் கத்திக் கொண்டிருந்த ‘சிறுத்தை குட்டிகள்’.. பத்திரமாக மீட்ட வனத்துறையினர் !

 

கரும்புத் தோட்டத்தில் கத்திக் கொண்டிருந்த ‘சிறுத்தை குட்டிகள்’.. பத்திரமாக மீட்ட வனத்துறையினர் !

தொட்டமுதிகரை என்னும் பகுதியில் தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான கரும்புத்தோட்டத்தில்  கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை,யானை கரடி உள்ளிட்ட பல வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு இருக்கும் புலி, சிறுத்தைகள் அவ்வப்போது காப்பகத்திலிருந்து வெளியேறிக் குடியிருப்பு பகுதிகளிலும் வயல் வெளிகளிலும் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்துள்ளன. மக்களின் புகாரின் பேரில், அடிக்கடி வனத்துறையினர் வந்து அவைகளைப் பிடித்துக் கொண்டு சென்று வருகிறார்கள். சில நேரங்களில், இவர்கள் பிடிக்க வருவது தெரிந்து புலி, சிறுத்தைகள் அங்கிருந்து தப்பி ஓடிவிடுமாம். 

ttn

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டமுதிகரை என்னும் பகுதியில் தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான கரும்புத்தோட்டத்தில்  கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. வழக்கம் போல இன்றும் வேலையாட்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு ஏதோ விலங்குகள் சத்தமிடுவது போன்று கேட்டுள்ளது. உடனே அங்குச் சென்ற பார்த்த தொழிலாளர்கள், கரும்பு சோகைகளிடையே 2 சிறுத்தைக் குட்டிகள் இருப்பதைப் பார்த்துள்ளனர். 

ttn

இது குறித்து அவர்கள் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்க விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தைக் குட்டிகளை பத்திரமாக மீட்டு காப்பகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். . காப்பகத்திலிருந்து வந்த சிறுத்தை இங்குக் குட்டிகளை ஈன்று விட்டுச் சென்றிருக்கும் என்றும் அவைகள் பிறந்து 20 நாட்கள் ஆகியிருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.