கருப்புப் பண முதலைகள் பட்டியலை இந்தியாவிடம் அளித்தது சுவிஸ்!

 

கருப்புப் பண முதலைகள் பட்டியலை இந்தியாவிடம் அளித்தது சுவிஸ்!

தற்போது அனுப்பப்பட்டுள்ள கணக்கு விபரங்கள் 2018ம் ஆண்டு வரையிலான கருப்பு பண முதலைகளின் பட்டியல். கடந்தாண்டில் ஒரு முறை சுவிஸ் வங்கிக்கணக்கை பயன்படுத்தி இருந்தாலும் அந்த கணக்குக்கு எங்கிருந்து பணம் வந்தது; அந்த கணக்கில் இருந்து பணம் எங்கு சென்றது என்ற முழு விபரமும் திரட்டப்பட்டு இந்தியாவிற்கு வழங்கப்படும்.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கியிருக்கும் இந்தியர்கள் விபரங்களை சுவிஸ் அதிகாரிகள் மத்திய அரசிடம் சமீபத்தில் அளித்தனர். சுவிஸ் வங்கி கணக்கு எண், கணக்கில் இருக்கும் நிலுவை தொகை, எங்கிருந்து பணம் வருகிறது என்பது போன்ற விபரங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த விபரங்களின் ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தம் உள்ளது. தற்போதுள்ள ஒப்பந்தப்படி சுவிஸ் வங்கியில் இந்தியர் எவரேனும் கணக்கு வைத்திருந்தால், அவரது விபரங்கள் இந்திய வரித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும்.
தற்போது அனுப்பப்பட்டுள்ள கணக்கு விபரங்கள் 2018ம் ஆண்டு வரையிலான கருப்பு பண முதலைகளின் பட்டியல். 

Swiss banks perfect place for black money

கடந்தாண்டில் ஒரு முறை சுவிஸ் வங்கிக்கணக்கை பயன்படுத்தி இருந்தாலும் அந்த கணக்குக்கு எங்கிருந்து பணம் வந்தது; அந்த கணக்கில் இருந்து பணம் எங்கு சென்றது என்ற முழு விபரமும் திரட்டப்பட்டு இந்தியாவிற்கு வழங்கப்படும். இது குறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பண பதுக்குவோருக்கு எதிராக சர்வதேச அளவில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட பின் இந்த ரகசிய கணக்குகளில் இருந்து சமீப ஆண்டுகளில் பெரும் தொகை வெளியேறியுள்ளது. ஏராளமானோர் வங்கிக் கணக்குகளை அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டுள்ளனர். இவர்களில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர்.