கருப்பட்டியுடன் இதையெல்லாம் சேர்த்து சாப்பிட்டால் அப்புறம் ஆரோக்கியம் தான்!

 

கருப்பட்டியுடன் இதையெல்லாம் சேர்த்து சாப்பிட்டால் அப்புறம் ஆரோக்கியம் தான்!

karupati

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரிலிருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் கிடைக்கிறது. கருப்பட்டியில் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுப்பெறுவதுடன் கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.

karupati

சுக்குக் கருப்பட்டி பெண்களின் கர்ப்பப் பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச் சத்துக்கள் கிடைக்கப் பெறும். காபியில் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைச் சேர்த்து குடித்தால் நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். மேலும் சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம். நகரத்தில் பிறந்து வளர்ந்து பனை மரத்தை பார்க்காமல் வளர்கிற இந்தத் தலைமுறைக்கு பனைமரம் என்பதன் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்கக் கூடியது என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.