கருத்து சொல்ல ரஜினி ஒன்றும் சட்டமன்ற உறுப்பினரோ, கட்சி தலைவரோ கிடையாது – தா.பாண்டியன் காட்டம்

 

கருத்து சொல்ல ரஜினி ஒன்றும் சட்டமன்ற உறுப்பினரோ, கட்சி தலைவரோ கிடையாது – தா.பாண்டியன் காட்டம்

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என கூறுவதற்கு ரஜினி சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை: சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என கூறுவதற்கு ரஜினி சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை. அவ்வாறு சிலர் வதந்தி கிளப்புவதாக சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு கட்சியினரும், அரசியல் கட்சி தலைவர்களும் மறுப்பு தெரிவித்தனர். ரஜினிக்கு சிஏஏ பற்றி சரிவர தெரியவில்லை என்று விமர்சித்தனர். இந்த நிலையில், சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என கூறுவதற்கு ரஜினி சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.

ttn

இது தொடர்பாக அவர் மதுரையில் பேசுகையில், “இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளது மற்றும் அவற்றிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது போன்ற எவ்வித விவரமும் நடிகர் ரஜினிக்கு தெரியாது. இந்தியாவில் எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது என்று அவருக்கு தெரியாது. குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்வதற்கு ரஜினி யார்? இவர் என்ன சட்டமன்ற உறுப்பினரா…கட்சி தலைவரா? ஒரு நடிகர் தன்னுடைய நடிப்போடு அவர் நிறுத்திக் கொள்வது நல்லது” என்றார்.