கருத்து கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

 

கருத்து கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் தேர்தல் நடைபெறுவதால் இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

டெல்லி: ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் தேர்தல் நடைபெறுவதால் இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி சட்டீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.  அதேபோல் மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் கடந்த நவம்பர் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் தேர்தல் நடைபெறுவதால் இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக எந்தவிதமான கருத்துக்கணிப்பும் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்