கருத்தடை செய்யப்படுவதை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பன்றிக்குட்டி! 

கருத்தடை செய்யப்படுவதை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பன்றிக்குட்டி! 

பன்றிகள் தெருவில் அலைந்து பார்த்திருக்கிறோம். ஆனால் ஜெர்மனியிலுள்ள பன்றிக்குட்டி நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்துள்ளது. 

பன்றிகள் தெருவில் அலைந்து பார்த்திருக்கிறோம். ஆனால் ஜெர்மனியிலுள்ள பன்றிக்குட்டி நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்துள்ளது. 

pig

கருத்தடை செய்யப்படுவதை எதிர்த்து பன்றிக்குட்டி பெயரில் பீட்டா விலங்குகள் நல அமைப்பினர் ஜெர்மனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில் பருவமடைந்த ஆண் பன்றிகளின் இறைச்சிகளை சமைக்கும்போது ஒரு வித துர்நாற்றம் வீசுவதுண்டு. இதனை தவிர்ப்பதற்காக ஆண் பன்றிக் குட்டிகளின் விதைப்பைகளை அகற்றிவிடுவதுண்டு. மேலும் பல இடங்களில் மயக்க மருந்துகூட கொடுக்காமல் துடிதுடிக்க துடிக்க விதைப்பைகளை நீக்குகின்றன. 

pig

கடந்த 2013 ஆம் ஆண்டு பன்றிக்குட்டிகளுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கருத்தடை செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்த 5 ஆண்டுகள் அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் இந்த அவகாசமானது தற்போது 2021 ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் பன்றிக்குட்டிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.