கருணாஸ் கைது விவகாரம்: அரசு தன் கடமையை செய்துள்ளது: தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

 

கருணாஸ் கைது விவகாரம்: அரசு தன் கடமையை செய்துள்ளது: தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

கருணாஸ் கைது விவகாரத்தில் சட்டம் தன்  கடமையை செய்துள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார் .

ஸ்ரீவில்லிபுத்தூர்: கருணாஸ் கைது விவகாரத்தில் சட்டம் தன்  கடமையை செய்துள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார் .

முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கருணாஸை, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான  போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு சென்ற பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன், ‘ கோவில் சிலை திருட்டு அதிகமாக நடைபெறுவதால் போலியான சிலையை வழிபடுகிறோமோ என பக்தர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு’ என்று கூறினார்.

பின்பு கருணாஸ் கைது விவகாரம் குறித்து பேசிய அவர், ‘முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை யார் வரம்பு மீறி பேசினாலும் அது தவறுதான். கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா, தனது மீதான புகாரை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வார்’ என்று தெரிவித்துள்ளார்.