கருணாஸ் ஆரம்பித்திருக்கும் கூவத்தூர் 2-வது இன்னிங்ஸ்? உற்சாகத்தில் ஸ்டாலின்… கோபத்தில் டிடிவி?

 

கருணாஸ் ஆரம்பித்திருக்கும் கூவத்தூர் 2-வது இன்னிங்ஸ்? உற்சாகத்தில் ஸ்டாலின்… கோபத்தில் டிடிவி?

எம்.எல்.ஏ கருணாஸிடம் கூவத்தூரில் எடுக்கப்பட்ட வீடியோ இருப்பதாகவும் இதனால் ஸ்டாலின் உற்சாகமாகவும், டிடிவி தினகரன் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: எம்.எல்.ஏ கருணாஸிடம் கூவத்தூரில் எடுக்கப்பட்ட வீடியோ இருப்பதாகவும் இதனால் ஸ்டாலின் உற்சாகமாகவும், டிடிவி தினகரன் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவாடானை எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் சமீபத்தில் சென்னையில் பேசியபோது முதல்வர் குறித்தும் காவல்துறை அதிகாரி குறித்தும் மிகவும் தரக்குறைவாக பேசினார். மேலும் சாதிய ரீதியாகவும் பல கருத்துக்களை அவர் முன்வைத்தார். இதனால் கருணாஸ் கைது செய்யப்பட்டு நேற்று ஜாமீனில் வெளியில் வந்தார்.

சசிகலா வெளியில் இருந்தபோது அனைத்து எம்.எல்.ஏக்களையும் கூவத்தூர் விடுதியில் தங்க வைத்தது கருணாஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த கதைதான். அவரே அதை ஒப்புக்கொண்டார். முதலில் கருணாஸ் பேசியதற்கு அமைதி காத்த தமிழக அரசு பிறகு கூவத்தூர் குறித்து கருணாஸ் பேசியதால் அவரை கைது செய்ய வேண்டும் என முடிவெடுத்ததாம். 

eps

ஹெச்.ராஜாவை கைது செய்யாமல் கருணாஸை மட்டும் கைது செய்தால் அது மிகப்பெரிய விவாதமாகும் என சில அமைச்சர்கள் எடப்பாடியிடம் கூறினார்கள் என்றும், ஆனால் ஆட்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் கூவத்தூர் விவகாரத்தை அவர் பேசிவிட்டார். எனவே கருணாஸை கைது செய்வதில் தாமதம் வேண்டாம் என முதல்வர் உத்தரவிட்டார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இது ஒருபுறமிக்க கருணாஸ் கைது செய்யப்பட்ட பிறகு அவரை போலீஸ் காவலில் எடுக்க காவல்துறை மிகவும் முயன்றது. ஆனால் அதற்கு நீதிமன்றம் அனுமதியளிக்கவில்லை. கூவத்தூரில் அனைத்து எம்.எல்.ஏக்களும் இருந்தபோது அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஒருவர் டிடிவி தினகரன் என்றும் மற்றொருவர் கருணாஸ் எனவும் அப்போதே பேச்சுக்கள் எழுந்தன. 

karunas

இதில் மிக முக்கிய பங்கு வகித்தது கருணாஸ் என்றும் கூறப்பட்டது. எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூரில் தங்கியிருந்த போது அவர்களுக்கு செய்யப்பட்ட பண பரிவர்த்தனை, அளிக்கப்பட்ட பரிசு பொருட்கள் என அனைத்தும் ஒன்றுவிடாமல் வீடியோ எடுக்கப்பட்டதாகவும் அதனை டிடிவி தினகரன் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

ஆனால் கருணாஸ் கைது செய்யப்பட்ட பிறகு எம்.எல்.ஏக்கள் தொடர்பான வீடியோ பிரதி கருணாஸிடமும் ஒன்று இருப்பதாக தமிழக அரசுக்கு தெரிய வந்ததாகவும் அதனை எப்படியாவது அவரிடம் இருந்து கைப்பற்றவே கருணாஸை போலீஸ் காவலில் எடுக்க தீவிரமாக அரசு இறங்கியதாகவும் கூறப்படுகிறது. 

palanisamy

மேலும், கருணாஸ் கைது செய்யப்பட்ட பிறகு அவர் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டன. இருப்பினும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு முயன்ற போது தன் மீது கை வைத்தால் கூவத்தூர் வீடியோவை வெளியிடும் மனநிலையில் கருணாஸ் இருந்ததை அறிந்து கொண்டதால்தான் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோது தமிழக அரசு எந்த ஒரு எதிர்வினையையும் காண்பிக்கவில்லையாம்.

தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு முயன்றது கருணாஸூக்கு தெரிய வந்ததும்தான் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டால் கூவத்தூர் தொடர்பான ரகசியங்களை வெளியிடுவேன் என கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் முதல்வர் பழனிசாமி கலக்கத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ttvdhinakaran

இது இப்படி இருக்க கூவத்தூர் ரகசியங்களை தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என கருணாஸ் கூறியது டிடிவிக்கு கடும் கோபத்தை உருவாக்கி இருக்கிறதாம். கருணாஸ் ஒருவேளை கூவத்தூர் தொடர்பாக நீதிமன்றத்திலோ? அல்லது பொதுவெளியிலோ பேசினால், ஏற்கனவே மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்திருக்கும் அதிமுகவுக்கு ஏற்படும் பாதிப்பை விடவும் தனக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என டிடிவி கருதுவதாக கூறப்படுகிறது

இதற்கிடையே சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்த கருணாஸ், திமுக நடத்திய போட்டி சட்டமன்றத்தில் கலந்து கொண்டது, தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோருடன் ஸ்டாலினை சந்தித்தது என  சமீப காலமாக திமுக முகாம் பக்கம் இருக்கிறார். எனவே கருணாஸிடம் இருக்கும் வீடியோவை எப்படியாவது கைப்பற்ற திமுக திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

mkstalin

கருணாஸிடம் இருப்பதாக கூறப்படும் வீடியோ வெளியானாலோ? இல்லை அவர் நீதிமன்றத்தில் கூவத்தூர் தொடர்பான ரகசியத்தை கூறினாலோ?அதிமுகவுக்கும், டிடிவி தினகரனுக்கும் ஒரே நேரத்தில் சிக்கல் வரும் அப்போது கருணாஸ் என்ற ஒற்றை கல் கொண்டு இரண்டு மாங்காய்களை அடித்து விடலாம் என அறிவாலயம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

அதுமட்டுமின்றி கருணாஸ் கூவத்தூர் ரகசியத்தையோ இல்லை அவரிடம் இருப்பதாக கூறப்படும் வீடியோவையோ வெளியிட்டால் ஈபிஎஸ் மற்றும் டிடிவி ஆகிய இருவருக்கும் வரப்போகும் சிக்கலால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உற்சாகத்தில் இருக்கிறார் எனவும் , கருணாஸ் மற்றும் ஸ்டாலின் சந்திப்பு அடுத்த வாரத்தில் நடைபெறலாம் எனவும் அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. ஆகமொத்தம் கூவத்தூரின் இரண்டாவது இன்னிங்ஸ் மூலம் தமிழக அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.