கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் – திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

 

கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் – திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பேசியுள்ளார்.

சென்னை: மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பேசியுள்ளார்.

விழுப்புரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தொடக்க நிகழ்வாக விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி பெரியார் விருது மும்பை வி.தேவதாசனுக்கும், அண்ணா விருது பொன்.இராமகிருஷ்ணனுக்கும், கலைஞர் விருது குத்தாலம் பி.கல்யாணம், பாவேந்தர் விருது புலவர் இந்திரகுமாரிக்கும், பேராசிரியர் விருது கவிக்கொண்டல் மா.செங்குட்டுவனுக்கும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், முத்தமிழ் கலைஞர் என்ற அறக்கட்டளையும் தொடங்கப்படும் என்று கூறினார்.