கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

 

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

கருணாநிதி மறைந்து 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை: கருணாநிதி மறைந்து 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திமுகவினர் உட்பட ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

marina

இந்நிலையில் கருணாநிதி உயிரிழந்த இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றது. இதனால் மெரினாவில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதி மற்றும் அவரது தாயார் அஞ்சுகம் அம்மாள் இணைந்திருப்பது போன்றும் அவரது சமாதியில் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.