‘கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதை பெருமையாக உணர்கிறேன்’ – ரஜினி பேட்டி

 

‘கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதை பெருமையாக உணர்கிறேன்’ – ரஜினி பேட்டி

கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதை பெருமையாக உணர்வதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதை பெருமையாக உணர்வதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. 

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். அவருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றிருந்தனர்.

kalaignar

திரைத்துறையை பொறுத்த வரையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, குஷ்பு, அருள்நிதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

kalaignar 

இந்நிலையில், நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினி, “கருணாநிதியின் சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்பான விழாவில் பங்கேற்றது மிகவும் பெருமையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்திருந்தும், அவர் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.