கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மின்சாரம் திருட்டு: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

 

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மின்சாரம் திருட்டு: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மின்சாராம் திருடப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்

சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மின்சாராம் திருடப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவிற்காக பிரமாண்ட கட்-அவுட்கள் தோரணங்கள், ஏராளமான மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா, கேரள முதல்வர் பினராயி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், தேசிய கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது சர்ச்சை ஆகியுள்ளது.

இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மின்சாராம் திருடப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அலிம்கோ நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் முகாம் சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. அதில், அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக சென்னை மாநகராட்சியின் மின்சாரம் திருடப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக கூறினார். மேலும், இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.