கருணாநிதி சிலை திறப்பு விழா; கெஜ்ரிவாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 

கருணாநிதி சிலை திறப்பு விழா; கெஜ்ரிவாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா வரும் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சிலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் திறக்கப்பட இருக்கிறது. மேலும், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி வருகிறார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்த மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் அவர் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.