கருணாநிதி சிலை திறப்பு: திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அமோக வரவேற்பு!

 

கருணாநிதி சிலை திறப்பு: திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அமோக வரவேற்பு!

அ.ம.மு.க.விலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதன் முதலாக பங்கேற்றார். 

சென்னை: அமமுக-விலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதன் முதலாக பங்கேற்றார். 

அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராகவும் டிடிவி தினகரனின் வலதுகரமாகவும் இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் கடந்த 14ஆம் தேதி  தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல்  12 மணிக்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து அவர் கௌரவித்தார்.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, முக ஸ்டாலின் மேல் உள்ள ஈர்ப்பால் திமுகவில் இணைந்தேன் எனக் கூறினார்.

senthilbalaji

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி,  முதன் முதலாக கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.நிகழ்ச்சி முடிந்த பிறகு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இருந்து புறப்பட்டு சென்ற செந்தில் பாலாஜியுடன் திமுக தொண்டர்கள் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் நிகழ்ச்சியிலேயே திமுக தனக்கு கொடுத்த வரவேற்பு தன்னை உற்சாகத்தில் ஆழ்த்தியதாகத் தெரிவித்தார்.