கருணாநிதி சிலை திறப்பிற்கு சோனியாவுக்கு அழைப்பு

 

கருணாநிதி சிலை திறப்பிற்கு சோனியாவுக்கு அழைப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்புக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்புக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து அவருக்கு திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே சிலை வைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக 8 அடி உயர கருணாநிதியின் சிலையை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் உருவாக்கி வருகிறார். தற்போது இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் சிலை திறப்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்தான் இந்த சிலையை திறந்து வைப்பார் என்றும் ஒருவேளை அவரால் திறந்து வைக்க முடியவில்லை எனில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிலையை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேலும் பல தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிகிறது.