கருணாநிதி உடல் நிலை.. நடிகர் அஜீத் நேரில் நலம் விசாரித்தார்

 

கருணாநிதி உடல் நிலை.. நடிகர் அஜீத் நேரில் நலம் விசாரித்தார்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர் அஜீத் குமார் நேரில் வந்து நலம் விசாரித்தார். இன்று இரவு காவேரி மருத்துவமனைக்கு நடிகர் அஜீத் குமார் நேரில் வந்தார். அங்கு கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதி எப்படி இருக்கிறார் என்பது குறித்து விசாரித்தார்.

அரசியல் துறையினர் தவிர திரையுலகினரும் பெரும் திரளாக காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தவண்ணம் உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சரத்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் நலம் விசாரித்துள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு நடிகர் அஜீத் குமார் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.