கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் களம்: சென்டிமெண்டாக திருவாரூரில் பிரசாரத்தை துவங்குகிறார் ஸ்டாலின்!

 

கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் களம்: சென்டிமெண்டாக திருவாரூரில் பிரசாரத்தை துவங்குகிறார் ஸ்டாலின்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுதினம் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

சென்னை: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுதினம் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல்

dmk

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதே தேதியில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கவுள்ளது.  

கருணாநிதி இல்லாத தேர்தல் களத்தில் ஸ்டாலின் 

karunnithi ttn

தமிழகத்தில் இதுவரை தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டு கட்சிகள் மட்டுமே  மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற 2 மிகப்பெரிய அரசியல் ஆளுமைகள் இல்லாமல் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் எதிர்கொள்ள உள்ள பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றதிற்கான  இடைத்தேர்தல் இரண்டும் அவர்களுக்கு நடத்தப்படும் பலப்பரீட்சையாகவே அமையப் போகிறது என்பது மட்டும் உறுதி.

குறிப்பாக கருணாநிதி இல்லாமல் அவனது மகனாய், தி.மு.க.வின் தலைவராய் முக ஸ்டாலின் முதன் முறையாக தேர்தல் களம் காண்கிறார். இது அவருக்கு மிக பெரிய இழப்பாக இருந்தாலும், கருணாநிதி பாதையில், கருணாநிதி கையாண்ட முறையிலேயே தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க வேட்பாளர் பட்டியல்

dmk candidates ttn

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 20 மக்களவை தொகுதிகளிலும், தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை நேற்று அறிவித்தார். 

வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு முன், கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்ற ஸ்டாலின், வேட்பாளர்கள் பட்டியலை வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார். அதே போல், கோபாலபுரம்  இல்லத்தில் உள்ள கலைஞரின் தாய், தந்தையின் புகைப்படத்தின் முன் நின்று வணங்கிய ஸ்டாலின், அதன் பிறகே வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

திருவாரூரில் ஆரம்பமாகும் பிரச்சாரம்!

stalin ttn

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரிலிருந்து, ஸ்டாலின்  வாக்கு சேகரிப்பைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர்  கருணாநிதி கடைசியாக இரு சட்டமன்றத் தேர்தல்களில் தனது சொந்த ஊரான திருவாரூரில்தான் போட்டியிட்டு  மாபெரும் வெற்றி பெற்றார். அவர் மறைவையடுத்து திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடவுள்ளார்.

அதன் காரணமாகவே 20ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூரிலும், மாலை 5 மணிக்கு தஞ்சையிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

தி.மு.க தலைவர் ஸ்டாலின்  முதல் கட்ட சுற்றுப்பயண விபரம் வருமாறு:-

election dmk ttn

  • காலை 10 மணி- நாகை பாராளுமன்ற தொகுதி, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம்.
  • மாலை 5 மணி- தஞ்சை பாராளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதி மற்றும் தஞ்சை திலகர் திடலில் பிரசார பொதுக்கூட்டம்.
  • மாலை 5 மணி- பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி, தாத்தையங்கார்பேட்டை ரோடு, முசிறியில் பொதுக்கூட்டம்.
  • காலை 10 மணி- சேலம் பாராளுமன்ற தொகுதி, சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம்.
  • மாலை 5 மணி – தருமபுரி பாராளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் பிரச்சார பொதுக்கூட்டம்.
  • காலை 10 மணி – தர்மபுரி பாராளுமன்ற தொகுதி, அரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அரூர் அண்ணா சிலை அருகில் பிரசார பொதுக்கூட்டம்.
  • மாலை 5 மணி- திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் பிரசார பொதுக்கூட்டம்.
  • மாலை 5 மணி – வட சென்னை பாராளுமன்ற தொகுதி, பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதி, இடம்: பெரம்பூர்.
  • காலை 10 மணி- காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி, திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி, இடம்- திருக்குழுக்குன்றம்.
  • மாலை 5 மணி – திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி, பூந்தமல்லி சட்ட மன்ற தொகுதி, இடம்-ஆவடி.
  • மாலை 5 மணி – திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி, நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி.
  • காலை 10 மணி- தேனி பாராளுமன்ற தொகுதி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி.
  • மாலை 5 மணி – தேனி பாராளுமன்ற தொகுதி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி.
  • காலை 10 மணி – மதுரை பாராளுமன்ற தொகுதி, மாலை 5 மணி – விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி.
  • காலை 10 மணி – சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதி.
  • மாலை 5 மணி- ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி.
  • மாலை 5 மணி- கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி, ஓசூர் சட்டமன்ற தொகுதி.
  • காலை 10 மணி – வேலூர் பாராளுமன்ற தொகுதி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதி.
  • மாலை 5 மணி- வேலூர் பாராளுமன்ற தொகுதி, குடியாத்தம் சட்டமன்ற தொகுதி.
  • அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி காலை 10 மணி – அரக்கோணம் பாராளுமன்ற தெகுதி, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி.
  • மாலை 5 மணி- தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.
  • மாலை 4 மணி- நீலகிரி பாராளுமன்ற தொகுதி.
  • காலை 10 மணி – திருப்பூர் பாராளுமன்ற தொகுதி.
  • மாலை 5 மணி – கோவை பாராளுமன்ற தொகுதி.
  • காலை 10 மணி – பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி.
  • மாலை 5 மணி – ஈரோடு பாராளுமன்ற தொகுதி.
  • காலை 10 மணி – கரூர் பாராளுமன்ற தொகுதி.
  • மாலை 5 மணி – கள்ளக் குறிச்சி பாராளுமன்ற தொகுதி.
  • காலை 10 மணி – விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி.
  • மாலை 5 மணி – ஆரணி பாராளுமன்றத் தொகுதி.
 கதாநாயகனா? வில்லனா?

stalin  ttn

 

முன்னதாக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய ஸ்டாலின், தேர்தல் அறிக்கை கதாநாயகனாக, கதாநாயகியாக இருக்குமே தவிர வில்லனாக இருக்காது என்றார். அதன்படி தேர்தலை பொறுத்தவரை மக்கள் மனதில் ஸ்டாலின் கதாநாயகனாக இருக்கிறாரா? அல்லது வில்லனாக உள்ளாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.