கருணாநிதியுடன் சிறை சென்றவருக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி

 

கருணாநிதியுடன் சிறை சென்றவருக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியோடு சிறைக்கு சென்றவருக்கு மு.க.ஸ்டாலின் ரூ 25,000 நிதியுதவி அளித்தார்.

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியோடு சிறைக்கு சென்றவருக்கு மு.க.ஸ்டாலின் ரூ 25,000 நிதியுதவி அளித்தார்.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவுக்காக திருச்சி சென்றபோது, 1953-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் கல்லக்குடி பெயர் மாற்றம் கோரி நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில், கருணாநிதியுடன் கலந்து கொண்டு சிறை சென்ற 88 வயதான பூவாளூரை சேர்ந்த செபஸ்தியன் என்ற ராசுவின் ஏழ்மை நிலைமை அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை அழைத்த மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வில், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.