கருணாநிதியாலேயே ஒன்னும் செய்ய முடியவில்லை; ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

 

கருணாநிதியாலேயே ஒன்னும் செய்ய முடியவில்லை; ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்னும் செய்யமுடியவில்லை மு.க.ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்? என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம்: கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்னும் செய்யமுடியவில்லை மு.க.ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்? என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்ட அதிமுக சார்பில் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட உத்தம சோழபுரத்தில் 70 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு விழாவில் பேசிய அவர், எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு இந்த கட்சி இருக்காது என்று தப்புக்கணக்கு போட்டார்கள் அப்போதைய தி.மு.க. தலைவர். அதையும் அப்போதைய தலைவர்கள் தவிடுபொடியாக்கினார்கள்.

தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து 28 எம்.எல்.ஏ.க்களை பெற்று பிரிந்த கழகத்தினை ஒன்றாக இணைத்து எம்ஜிஆர் கண்ட கனவை நினைவாக்கியவர் ஜெயலலிதா..இந்த கழகத்தை தோற்றுவித்தபோது திமுக-வால் எவ்வளவோ, பிரச்னைகளை சந்தித்தார். எவ்வளவோ சோதனைகளையோ சந்தித்தார். அத்தனையும் தாக்குப்பிடித்துதான் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தந்தார்.

ஜெயலலிதா, எம்ஜிஆர் வழியிலேயே நின்று கழகத்தை கட்டிக் காத்தபோது திமுகவால் எவ்வளவோ பிரச்னைகள் சோதனைகளை சந்தித்தார். அத்தனையும் மக்கள் துணை கொண்டு, கழகத்தினுடைய நிர்வாகிகள் துணை கொண்டு எதிரிகளை வென்று தலை நிமர்ந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி தந்தவர் ஜெயலலிதா.

இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சி தலைவரும் அவ்வளவு சோதனைகளை சந்தித்தது கிடையாது. திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதாவை துன்பப்படுத்தினார். அந்த துன்பத்தை எல்லாம் தாங்கிக்கொண்டு நமக்கு வாழ்வு தந்தது ஜெயலலிதா.

திமுக-வைபோல் குடும்ப அரசியல் கிடையாது. யார்? சிறப்பாக செயல்படுகின்றார், யார்? விசுவாசமான இருக்கின்றார். யார் மக்களிடத்திலேயே செல்வாக்கு பெறுகின்றார். மக்களுக்கு சேவை செய்பவர்கள் யார்? என்பதை கண்டறிந்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பதவி வழங்கினார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கூட எம்.எல்.ஏ., எம்.பி. ஆக முடியும்.

அனைவரின் ஒத்துழைப்போடு இன்று அதிமுக ஆட்சி வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது இதையெல்லாம் பொறுக்க முடியாத திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். இப்போது திமுக தலைவராகவும் இருக்கிறார். கருணாநிதி இருக்கும்போதே அ.தி.மு.க.வை ஒன்னும் பண்ண முடியவில்லை. ஸ்டாலினால் என்ன செய்ய முடியும் என்றார்.