கருணாநிதிக்கு இரங்கற்பா பாடிய காவலருக்கு அரசு நெருக்கடி? விருப்ப ஓய்வு பெற்ற பரிதாபம்

 

கருணாநிதிக்கு இரங்கற்பா பாடிய காவலருக்கு அரசு நெருக்கடி? விருப்ப ஓய்வு பெற்ற பரிதாபம்

திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு பெண் காவலர் செல்வராணியும் கருணாநிதிக்கு இரங்கற்பா தெரிவித்திருக்கிறார். அதனையடுத்து செல்வராணிக்கு மெமோ கொடுத்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக-வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு கட்சி பேதமின்றி, தொழில் பேதமின்றி அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.

அந்த வகையில் திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு பெண் காவலர் செல்வராணியும் கருணாநிதிக்கு இரங்கற்பா தெரிவித்திருக்கிறார். அதனையடுத்து செல்வராணிக்கு மெமோ கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மெமோவுக்கு அவர் விளக்கமளிக்கும் முன்பே அவர் திருச்சியில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்வராணி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செல்வராணி கூறுகையில், கருணாநிதிக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில்தான் நானும் தெரிவித்தேன். ஆனால் அதற்கு மெமோ கொடுத்தார்கள். அந்த மெமோவிற்கு விளக்கம் கொடுக்கும் முன்பே என்னை நாகப்பட்டினம் வரை பணியிட மாற்றம் செய்தார்கள். எனவே நான் விருப்ப ஓய்வு பெற்றேன். நிச்சயமாக இதில் அரசு நெருக்கடி கொடுத்திருக்கும். காவல்துறையில் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது என்றார்.