கரண்ட் கம்பியில் சிக்கிய விமானம்.. அந்தரங்கத்தில் தொங்கிய விமானி!

கரண்ட் கம்பியில் சிக்கிய விமானம்.. அந்தரங்கத்தில் தொங்கிய விமானி!

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கரண்ட் கம்பியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததை பலரும் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதன் வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பலராலும் பார்க்கப்பட்டுள்ளது. இறுதியாக, போராடி விமானி மீட்கப்பட்டார்.

அமெரிக்காவில் உள்ள மின்னசொட்டா பகுதியில் வசித்து வருபவர் 65 வயது மதிக்கத்தக்க தாமஸ் காஸ்கோவிச். இவர் தனக்கு சொந்தமாக சிறிய ரக விமானம் ஒன்று வைத்திருக்கிறார்.

flight

அவ்வபோது இந்த விமானத்தை ஓட்டிச் சென்று வரும் தாமஸ், வழக்கம்போல நேற்றைய தினமும் விமானத்தை அருகில் உள்ள பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளார். திடீரென ஸ்காட் கவுன்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் சிறிய பழுது ஏற்பட்டதால் வேகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. 

இதனால், விமானம் அங்கும் இங்கும் சற்று தடுமாறியதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். வேகத்தை கட்டுக்குள் கொண்டுவர விமானத்தை தாமஸ் கீழே இறக்க முயற்சித்துள்ளார். அச்சமயம் விமானமானது உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கி கொண்டது. 

விமானத்துடன் சிறிது நேரம் அந்தரத்தில் போராடிக்கொண்டிருந்த விமானியை கண்ட அப்பகுதி மக்கள், அவசர எண்ணான 911 க்கு அழைத்துள்ளனர். அழைப்பை ஏற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சில மணி நேரம் போராடி விமானி தாமஸை எவ்வித காயமும் இன்றி மீட்டு இருக்கின்றனர். 

பின்னர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு விமானமும் கம்பியில் இருந்து எடுக்கப்பட்டது. திடீரென இந்த விபத்து ஏற்பட்டதால் சற்று மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.