கரடி பொம்மையை காதல் பரிசாக கொடுப்பது ஏன்..! சுவாரஸ்யமான பின்னணி.!?

கரடி பொம்மையை காதல் பரிசாக கொடுப்பது ஏன்..! சுவாரஸ்யமான பின்னணி.!?

ஃபிப்ரவரி 10 என்பது காதலர் தினத்தின் முன்னோட்ட நாட்களில் ‘ டெடி’ டே என்று அழைக்கப்படுகிறது. அது டெடி என்கிற பெயரில் கடைகளில் விற்கும் கரடி பொம்மை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா?.இல்லை , அதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. 

teddy-day-01

ஒரு அமெரிக்க ஜனாதிபதி இருக்கிறார். அவர் பெயர் தியோடோர் ரூஸ்வெல்ட். வேட்டைப் பிரியரான ரூஸ்வெல்ட்டை 1902 வருடம் நவம்பர் மாதம் 14-ம் தேதி, கரடி வேட்டைக்கு அழைத்துப் போனார் மிஸ்ஸிஸிப்பி மாநில கவர்னர். அன்றைய தினம் ரூஸ்வெல்ட் கண்ணில் ஒரு கரடிகூட தென்படவில்லை. வெறுத்துப் போனார்.இதைக் கவனித்த அவரது நண்பர்கள்,ஒரு கரடியை விரட்டி மடக்கி வைத்துக்கொண்டு ரூஸ்வெல்ட்டை அழைத்துச் சுடச் சொன்னார்களாம். பெரிய வேட்டைக்கார்ரான ரூஸ்வெல்ட்டுக்கு அது அவமானமாக தோன்ற மறுத்து விட்டாரம்.

இது மறுநாள் செய்திதாள்களில் வெளியாகி, நாடெங்கும் பேசப்பட்டது. அந்தச் செய்தியை படித்த பேரிமேன் என்கிற கார்டூனிஸ்ட் தியோடோர் ரூஸ்வெல்டை கரடியாக சித்தரித்து 1902 நவம்பர் 16-ம் தேதி பத்திரிகையில் கார்டூன் ஒன்றை வரைந்தார்.அந்தக் கார்டூனை நியூயார்கின் புரூக்லின் பகுதியில் பொம்மைக்கடை வைத்திருந்த ஒருவர் பார்த்தார். அவர் பெயர் மோரிஸ் மிட்சம், அவர் அந்த கார்டூனில் இருந்த கரடியைப் போல பொமை செய்து வைக்க, அந்த கரடி பொம்மை உடனடியாக ஹிட் அடித்தது. பெண்களும் குழந்தைகளும் அதை வாங்கிக் குவித்தனர்.

teddy-day-history

தியடோர் ரூஸ்வெல்ட் இரண்டாவது முறை ஜனாதிபதி தேர்தலுக்கு நின்றபோது அந்தக் கரடி பொம்மை தேர்தல் பிரச்சாரத்தில பயன்படுத்தப்பட்டது. மோரிஸ் மிட்சம் ஜனாதிபதியின் அனுமதியோடு தியோடோர் என்பதன் செல்ல வடிவமான ‘டெடி’ என்பதையே தனது கரடி பொம்மைக்குப் பெயராகச் சூட்டினார். அந்த தியோடோர் ரூஸ்வெல்ட் என்கிற அமெரிக்க ஜனாதிபதியின் பொம்மையைத்தான்,நீங்கள் இப்போது உங்கள் காதலிகளுக்குப் பரிசளிக்கிறீர்கள்.