கரடியின் பித்தநீர் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை! சீனர்களின் தந்திரம்… 

கரடியின் பித்தநீர் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை! சீனர்களின் தந்திரம்… 

சீனாவில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கரடியின் பித்தநீரைக் கொடுத்து சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. 

சீனாவில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கரடியின் பித்தநீரைக் கொடுத்து சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. 

சீனாவின் தேசிய ஆணையம், கரடியின் பித்தநீர், ஆட்டின் கொம்பு மற்றும் மூலிகைகள் அடங்கிய ‘டாங்ரேகுவிங்’ ஊசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. பல நூறு ஆண்டுகளாக, சீன பாரம்பரிய மருந்துகளில் கரடியின் பித்தநீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமாக உள்ளவர்களுக்கும் கரடியின் பித்தநீர் கலந்த மருத்தை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கலவைக்கு மருத்துவ குணம் உள்ளது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக சீனாவில் கரடியின் பித்தநீர் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. 

bear

வனவிலங்குகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட சிறிது வாரங்களிலேயே இதுபோன்ற அனுமதி வழங்கப்பட்டிருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.