கரடியின் பிடியில் சிக்கிய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 38 புள்ளிகள் குறைந்தது

 

கரடியின் பிடியில் சிக்கிய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 38 புள்ளிகள் குறைந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சுமாராக இருந்தது. சென்செக்ஸ் 38 புள்ளிகள் குறைந்தது.

தர நிர்ணய நிறுவனமான பிட்சி ரேட்டிங்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த  தனது மதிப்பீட்டை தற்போது 5.5 சதவீதமாக குறைத்துள்ளது. இதே நிறுவனம் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 6.6 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என கணித்து இருந்தது. ஹீரோமோட்டோகார்ப், மாருதி சுசுகி உள்பட பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லை.

உச்ச நீதிமன்றம்

தொலைத்தொடர்பு துறையின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டிய தள்ளப்பட்டுள்ளன. இதனால் தொலைத்தொடர்பு துறையை சேர்ந்த நிறுவன பங்குகள் பலத்த சரிவை சந்தித்தன. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.

ஏர்டெல்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல் உள்பட 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில் யெஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, இன்போசிஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் பவர் கிரிட் உள்பட 18 நிறுவனங்களின் விலை குறைந்தது.

பிட்ச் ரேட்டிங்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று சுமார் 1,078 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,375-க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் சுமார் 163 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.149.27 லட்சம் கோடியாக சரிந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 38.44 புள்ளிகள் சரிந்து 39,020.39 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 21.50 புள்ளிகள் குறைந்து 11,582.60 புள்ளிகளில் முடிவுற்றது.