கம கம ஆம்பூர் மட்டன் பிரியாணி! இந்த ஸ்டைல்ல செய்து பாருங்க!

 

கம கம ஆம்பூர் மட்டன் பிரியாணி! இந்த ஸ்டைல்ல செய்து பாருங்க!

ஆம்பூர் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கமகம மட்டன் பிரியாணி தான். ஒவ்வொரு ஊருக்கும் பிரியாணி செய்வதில் ஒவ்வொரு பக்குவம் இருக்கிறது. ஆம்பூரில் செய்யும் பிரியாணியின் முறையைப் பார்க்கலாம். 

ஆம்பூர் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கமகம மட்டன் பிரியாணி தான். ஒவ்வொரு ஊருக்கும் பிரியாணி செய்வதில் ஒவ்வொரு பக்குவம் இருக்கிறது. ஆம்பூரில் செய்யும் பிரியாணியின் முறையைப் பார்க்கலாம். 

ambur

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 1 கிலோ
மட்டன் – 1 கிலோ
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 500 கிராம்
பழுத்த தக்காளி – 500 கிராம்
பச்சை மிளகாய் – 5
புதினா – ஒரு கொத்து
எண்ணெய் – 200 மில்லி
நெய் – 50 மில்லி
எலுமிச்சை – பாதி
பட்டை, ஏலம், கிராம்பு – தலா 2
பிரியாணி இலை – 2
உப்பு தூள் – தேவையான அளவு
செய்முறை
அரிசியை நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மட்டனை நன்றாக கழுவி, கொழுப்பை எடுத்து விட்டு மீண்டும் கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து விட்டு அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும்  பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு அவை வெடிக்கும் வரையில் பொறுத்திருங்கள். அதன் பின்னர் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து இதனுடன் சேர்த்து நன்கு சிவக்க வதக்க வேண்டும். வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி மிளகாய் தூள், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு புதினா, தயிர் சேர்க்க வேண்டும். அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்க வேண்டும்.

ambur mutton

அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தணலை சிம்மில் வைத்து மட்டனை நன்றாக வேக விட வேண்டும். மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரையில் வேக வைக்க வேண்டும். மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னே கால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்க விட்டு கடைசியாக சிறிது நெய் ஊற்றி, எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரையில் நன்றாக தம்மில் விட வேண்டும். பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.