கம்ப்யூட்டரும் தெரியும் கலப்பையும் தெரியும் – பஞ்சாயத்து தலைவியான பட்டதாரி பெண்

கம்ப்யூட்டரும் தெரியும் கலப்பையும் தெரியும் – பஞ்சாயத்து தலைவியான பட்டதாரி பெண்

ஒரு சுயேச்சை வேட்பாளராக, பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பிரதான திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக – ஆதரவாளர்களை ரேகா வென்றார். இந்த கிராமத்தில் சுமார் 2,000 வாக்காளர்கள் உள்ளனர், ரேகா 881 வாக்குகளைப் பெற்று, 265 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.

சனிக்கிழமை முதல், முன்னாள் கம்ப்யூட்டர் பொறியாளரும், இந்நாள் ஆர்கானிக் விவசாயியான  37 வயதான ரேகா ராமு, ஆவடி  அருகே உள்ள தனது மாமியார் கிராமமான பாண்டேஸ்வரத்திற்கு பண்ணை வேலைகளை மேற்பார்வையிட இனிபோக  மாட்டார்.

ஒரு சுயேச்சை வேட்பாளராக, பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பிரதான திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக – ஆதரவாளர்களை ரேகா வென்றார். இந்த கிராமத்தில் சுமார் 2,000 வாக்காளர்கள் உள்ளனர், ரேகா 881 வாக்குகளைப் பெற்று, 265 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.

rekha-president

 தனது கணவர் வி.எம்.பார்த்தசாரதியுடன் சேர்ந்து Organic விவசாயியாக மாறுவதற்கு முன்பு ரேகா சென்னையில் வளர்ந்து பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்தார், அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே  போட்டியிட முடிவு செய்ததாக கூறினார்.

“நாங்கள் ஏற்கனவே மக்களோடு  பணியாற்றியுள்ளோம். ஒவ்வொரு வேலையும் செய்ய, பஞ்சாயத்து தலைவரின்  ஒப்புதல் தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். அப்போதுதான் நாங்கள் தேர்தலில் போட்டியிட  முடிவு செய்தோம்,” என்று அவர் கூறினார்.
கிராமப்புற பொருளாதாரம் கஷ்டப்பட்டு  வரும் நிலையில்,  குக்கிராமங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில்  ரேகாவின் கவனம் உள்ளது. அவர் ஏற்கனவே ‘ஃபார்மர் அண்ட் கோ’ என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார், இங்கு  அவர்களின் பண்ணையில் இயற்கையாக வளர்க்கப்படும் உணவுப் பொருட்களை விற்கிறது. “விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை  சந்தையில் விற்கவும் வாங்கவும் நாங்கள் உதவுகிறோம்,” என்று அவர் கூறினார். 

natural-farming

கிராமத்தில் பல தலைமுறைகளாக வசித்து வரும் பார்த்தசாரதி, அவர்கள் கவனம் செலுத்த முயற்சிக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சட்டவிரோதமாக ஆற்று மணல் சுரண்டலாகும். ரேஷன் அரிசி திருட்டு, உள்ளூர் சந்தையில் காய்கறிகள் கிடைக்காததுபோன்றவை  பொது வாழ்வாதார பிரச்சினைகள்
.
பிரச்சாரத்தின்போது, தம்பதியினர் சாதி  பிரச்சினைகளை எதிர்கொண்டனர். உதாரணமாக, வாக்குப்பதிவின் போது சாதி பெயர்கள் முன்வைக்கப்பட்டன என்றார் . பார்த்தாசாரதி இதற்கு முன்னர் கிராமத்தில் சாதி அடிப்படையிலான பிளவுகளைக் கண்டதில்லை, ஆனால் தேர்தலின் போது அது அதிகரித்தது ஆச்சரியமாக இருந்தது என்றார். கிராமத்தில் உள்ள சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் ஆராய்வோம் என்று பார்த்தசாரதி கூறினார்,