கம்ப்யூட்டரில் தகவல்களை திருடும் ஹேக்கர்ஸ் திண்டிவனம்

 

கம்ப்யூட்டரில் தகவல்களை திருடும் ஹேக்கர்ஸ் திண்டிவனம்

முக்கிய தகவல்களை கம்ப்யூட்டர்களில் வைத்திருப்பவர்களுக்கு குறி ! தகவல்களை திருடிவிட்டு பணம் கேட்டு மிரட்டல் !

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே போட்டோ ஸ்டூடியோவில் உள்ள கம்ப்யூட்டரில் இருந்த ஏராளமான புகைப்படங்களை எடுத்துவிட்ட ஹேக்கர்ஸ் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.

திண்டிவனம் அருகே அய்யன் தோப்பு கிராமத்தில் வசித்து வரும் கண்ணன் என்பவர் வீட்டிலேயே போட்டோ ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு மெயில் வந்தது. அதை கண்ணன் திறந்து பார்த்தபோது சிறிது நேரம் கம்ப்யூட்டர் பணி செய்யாமல் நின்று போனது. அடுத்த 10 நிமிடத்தில் மீண்டும் கம்ப்யூட்டர் பணி செய்ய தொடங்கியது. பின்னர் வழக்கம்போல் பணிகளை தொடரலாம் என நினைத்த கண்ணனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Studio Owner Tindivanam

அவர் கம்ப்யூட்டரில் இருந்த அனைத்து சுபநிகழ்ச்சிகளின் படங்களும் காணாமல் போனது. இதனால் அவர் குழப்பம் அடைந்தார். ஏராளமான திருமண வீடியோக்களும் அந்த கம்ப்யூட்டரில் சேர்த்து வைத்திருந்தார். என்னவென்று தெரியாமல் விழி பிதுங்கியிருந்த கண்ணனுக்கு மேலும் ஒரு மிரட்டல் மெயில் வந்தது. அந்த மெயிலில் கண்ணனுடைய கம்ப்யூட்டரில் இருந்த தகவல்கள் அழித்துவிட்டதாகவும், அது வேண்டும் என்றால் 1,120 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 80 ஆயிரம். இதை பார்த்து செய்வதறியாது திகைத்தார் கண்ணன். இதுகுறித்து காவல்துறையினரிடம் அண்ணன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சைபர் கிரைம் உதவியுடன் ஹேக்கர் கும்பல் யார்? ஏன் ஸ்டுடியோவில் உள்ள புகைப்படங்களையே குறி வைக்கிறார்கள் என்று விசாரணையை தொடங்கி உள்ளன. மேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த 24ம் தேதி நாங்குநேரியில் நடந்ததாக கூறப்படுகிறது.