கம்புப் பணியாரம்

 

கம்புப் பணியாரம்

கம்புப் பணியாரம்

kambhupaniyaram

தேவையான பொருட்கள்
கம்பு                -1கப்
உளுந்து            -1/4கப்
வெந்தயம்            -1/4டீஸ்பூன்
பச்சைமிளகாய்        –    2
வெங்காயம்            –    4
இஞ்சித் துருவல்        –    1 டேபிள்ஸ்பூன்
கடுகு                –    1/4டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு        –    1/4டீஸ்பூன்
கடலைப்பருப்பு        –    1/4டீஸ்பூன்
பெருங்காயம்        –    1/4 டீஸ்பூன்
எண்ணெய்            –    தேவையான அளவு
உப்பு                 –    தேவையான அளவு

kambhupaniyaram

செய்முறை
கம்பு, உளுந்து, வெந்தயம் இம்மூன்றையும் தனித்தனியே நன்றாக கழுவி, 4 மணிநேரம் ஊறவைக்கவும். பின் இவற்றை அரைத்து உப்பு சேர்த்து கலக்கி 4 மணிநேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் போட்டு, தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.பணியாரக்கல்லை சூடாக்கி, குழிகளில் எண்ணெய் விட்டு அதன் மேல் மாவை ஊற்றவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். காரச்சட்னியுடன் பரிமாறினால் ருசியாக இருக்கும்.