கம்பீர் அடித்த சிக்ஸ்! கபில் மிஸ்ரா பதவியை பறிக்கக் கோரிக்கை.

கம்பீர் அடித்த சிக்ஸ்! கபில் மிஸ்ரா பதவியை பறிக்கக் கோரிக்கை.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் இப்போது கிழக்கு டெல்லியின் பிஜேபி எம்.பி. கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு டெல்லியில் நடந்து வரும் கலவரங்களுக்கும்,உயிரிழப்புகளுக்கும் உள்ளூர் முன்னாள் அம் ஆத்மி எம்.எல்.ஏவும் தற்போது பிஜேபி தலைவர்களில் ஒருவருமான கபில் மிஸ்ரா வெளியிட்ட ஒரு ட்வீட்தான் காரணம் என்பது உலகத்துக்கே தெரியும்

அந்த ட்வீட்டில் ‘ இன்னும் மூன்று நாள் உங்களுக்கு அவகாசம் தருகிறோம்.ட்ரம்ப் நாடு திரும்புவதற்குள் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சாலைகளை திறக்க வேண்டும்.இல்லாவிட்டால் நாங்களே களமிறங்குவோம். அப்போது எந்த சமாதானத்தையும் ஏற்க மாட்டோம்’ என்று சொல்லி இருந்தார்.

violence-delhi.jpg

இதுகுறித்து பிஜேபி தலைவர்கள் யாரும் ஒரு கருத்தோ கண்டனமோ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் கவுதம் கம்பீர் ஒரு அதிரடியான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.’டெல்லி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,கலவரத்தை தூண்டும்படி யார் பேசி இருந்தாலும் அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.அது கபில் மிஸ்ராவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப் பட வேண்டும்.கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.அவரை கட்சியை விட்டே நீக்க வேண்டும்.

violence-delhi.jpg1.jpg

குடியுரிமை சட்ட ஆதவாளர்கள்,எதிர்ப்பாளர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் ‘ என்று கம்பீர் பேசி இருக்கிறார். 

கட்சியின் பெருந்தலைகளே கபில் மிஸ்ராவை கண்டிக்காதபோது புதுமுக எம்.பியான கம்பீரின் இந்தப் பேச்சு டெல்லி பிஜேபி வட்டாரத்தில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.