கம்பாளா சாதனையாளரை தூக்கியது இந்திய தடகள ஆணையம்.

 

கம்பாளா சாதனையாளரை தூக்கியது இந்திய தடகள ஆணையம்.

நேற்று ஒரே நாளில் வலைத்தளங்களில் வைரலான பெயர் ஸ்ரீநிவாஸ் கவுடா! கம்பாளா விளையாட்டில் இரண்டு எருமை மாடுகளுடன் 142.5 மீட்டர் தூரத்தை 13.62 வினாடிகளில் சேற்றில் ஓடிக்கடந்த கவுடா ஒரே நாளில் இந்தியாவின் உசேன் போல்ட் ஆகிவிட்டார்.

நேற்று ஒரே நாளில் வலைத்தளங்களில் வைரலான பெயர் ஸ்ரீநிவாஸ் கவுடா! கம்பாளா விளையாட்டில் இரண்டு எருமை மாடுகளுடன் 142.5 மீட்டர் தூரத்தை 13.62 வினாடிகளில் சேற்றில் ஓடிக்கடந்த கவுடா ஒரே நாளில் இந்தியாவின் உசேன் போல்ட் ஆகிவிட்டார்.

srinivas gowda

வெறுங்காலில் சேற்றில் ஓடும்போதே அவர் 100 மீட்டர் தூரத்தை உசேன் போல்ட்டை விட 0.03 வினாடி குறைவான நேரத்தில் கடந்து விட்டார், இவரை இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். மகேந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, ஒருபடி மேலே போய் ‘அவருடைய உடற்கட்டைப் பாருங்கள், அவரால் எதையும் சாதிக்க முடியும், ஒன்று அவரை ஒலிம்பிக் 100 மீட்டர் போட்டியில் ஓட வையுங்கள், அல்லது கம்பாளா போட்டியை ஒலிம்பிக்கில் சேருங்கள்’ என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

 

அதைத்தொடர்ந்து எஸ்.ஏ.ஐ என்கிற ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இண்டியா ஸ்ரீநிவாஸ் கவுடாவைத் தொடர்பு கொண்டு பேசி அவருக்கு பெங்களூருக்கு டிக்கெட் போட்டு விட்டதாகவும், திங்களன்று அவரை தங்களது கோச்சுகள் சந்தித்து மதிப்பீடு செய்வார்கள் என்றும் அறிவித்து இருக்கிறது.

sports-minister

விளையாட்டுதுறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜுவுக்கு இது புதிய அனுபவம் அல்ல, 2019-ல் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உள்ளூர் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 11 வினாடியில் கடந்த போது இதே போல அவரையும் அழைத்துச் சோதித்தார். கிடைத்த விளம்பரங்களால் பெற்ற அழுத்தம் காரணமாக அவரால் தேர முடியவில்லை.

சாதாரண கட்டிடத் தொழிலாளியான ஸ்ரீநிவாஸ் இது பற்றி சொல்லும் போது, எருமைகள்தான் வேகமாக ஓடின, நான் விரட்டிக்கொண்டு போனேன் என்று சொன்னாராம். இந்த எளிமையே அவரை உலக விளையாட்டு அரங்குக்கு கொண்டு போகும் என்று நம்புவோம்.