‘கமிஷனர் நாற்காலியில் இருக்கும் இந்தியரே… ஜனநாயகக் குரல்களைக் கட்டுப்படுத்தாதீர்கள்’ கமல் ஹாசன் ட்வீட்!

 

‘கமிஷனர் நாற்காலியில் இருக்கும் இந்தியரே… ஜனநாயகக் குரல்களைக் கட்டுப்படுத்தாதீர்கள்’ கமல் ஹாசன் ட்வீட்!

அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

இந்நிலையில்  குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து அக்கட்சி சார்பில் இன்று மாலை 3 மணியளவில் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பல கட்சி மற்றும் அமைப்பு  கலந்துகொள்ளவிருந்த இந்த பேரணிக்கு சென்னை காவல்துறை அனுமதி அளித்த நிலையில் அதை மீண்டும் திரும்ப பெற்றுள்ளது. இது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சென்னை ஆணையர் இருக்கையில் இருக்கும் இந்தியரே  உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்,  வள்ளுவர் கோட்டத்தில் எழுப்பப்பட வேண்டிய ஜனநாயகக் குரல்களைக் கட்டுப்படுத்த வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.