‘கமல் 60’ பிரம்மாண்ட நிகழ்ச்சியில் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

 

‘கமல் 60’ பிரம்மாண்ட  நிகழ்ச்சியில் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கமல் இயக்குநர்,  தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர்  என பன்முக தன்மை கொண்டவர். 

கமல் ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவரை சிறப்பிக்கும் வகையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

உலக நாயகன் கமல் ஹாசன் ஐந்து  வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை திரையுலகில் உச்ச நட்சத்திரமாக  இருந்து வருகிறார்.  அவர் அரிதாரம் பூசாத வேடங்களே இல்லை..  நடிகர் என்று சின்ன வட்டத்துக்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாத கமல் இயக்குநர்,  தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர்  என பன்முக தன்மை கொண்டவர். 

kamal

இந்நிலையில் கமல் ஹாசன்  திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிறது. அந்த வகையில்  நவம்பர் 7, 8, 9, ஆகிய தினங்களில் அவரை சிறப்பிக்கவுள்ளது ராஜ்கமல் ஃபிலிம்ஸ். அதில் கமலின் பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதி பரமக்குடியில் தனது தந்தையின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கும் கமல், 8 ஆம் தேதி இயக்குநர்  சிகரம் பாலச்சந்தரின் உருவச்சிலையை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷல் நிறுவன அலுவலகத்தில் திறந்து வைக்கிறார். 

kamal

இறுதி கொண்டாட்டமாக நவம்பர் 9 ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின்  பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்விழாவில்  சமகால நடிகரும் நெருங்கிய நண்பருமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருக்கிறார்.  மேலும் இந்த விழாவில் திரை நட்சத்திரங்கள் ஒன்றுசேர்ந்து கமலை வாழ்த்தவுள்ளனர்.