கமல் வீட்டைச்சுற்றி போலீஸ் குவிப்பு..! பதட்டத்தில் தொண்டர்கள்!?

 

கமல் வீட்டைச்சுற்றி போலீஸ் குவிப்பு..! பதட்டத்தில் தொண்டர்கள்!?

இந்துக்கள்  குறித்த சர்ச்சை பேச்சினால்  பரப்புரை மேற்கொள்ள முடியாமல் அதை ரத்து செய்துள்ளார் மக்கள்  நீதி மய்யத்தின்  தலைவர் கமல் ஹாசன்.  

சென்னை:  இந்துக்கள்  குறித்த சர்ச்சை பேச்சினால்  பரப்புரை மேற்கொள்ள முடியாமல் அதை ரத்து செய்துள்ளார் மக்கள்  நீதி மய்யத்தின்  தலைவர் கமல் ஹாசன்.  

தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் என்று அறிவித்த நிலையில் ஆறாம் கட்ட தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

kamal

அந்த வகையில்  மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சியில்  அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம்  வாழும் இடம் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. காந்தியின் சிலையின் முன்பு நின்று கூறுகிறேன். சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்கியது தீவிரவாதம். நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அவரை கொலைக்கு நியாயம் கேட்க  வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இது சமமான, சமரசமான  இந்தியாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது நல்ல இந்தியனின் விருப்பம். நான்  நல்ல இந்தியன், அதை மார்தட்டிச் சொல்வேன்’ என்றார்.

jp

கமலின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்து தான் முதல் தீவிரவாதி என்று கூறிய கமலுக்கு பாஜகவினரும் அதன் ஆதரவாளர்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் கமலின் வீட்டின் முன்பு போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில்  போலீசார் அங்குக் குவிக்கப்பட்டுள்ளனர்.

police

இந்நிலையில்  ஒட்டப்பிடாரத்தில் கமல் பங்கேற்க இருந்த பிரச்சாரம் இன்று ரத்தாகியுள்ளது. இது மய்யம் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்  நாளை திருப்பரங்குன்றத்தில் நடக்கும் பிரசார கூட்டத்தில் காலம் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.  நாளை மாலை 4 மணிக்குத் தொடங்கவுள்ள இந்த பரப்புரையில்  பெரியார் நகர், பனையூர், அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கமல் பிரசாரம்  செய்வார் என்று மய்யம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.