கமல் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்: மீண்டும் இப்படி புகைப்படங்கள் எடுப்பேன்: அக்‌ஷரா ஹாசன் அதிரடி!

 

கமல் மகளின் அந்தரங்க புகைப்படங்கள்  லீக்:  மீண்டும் இப்படி புகைப்படங்கள் எடுப்பேன்: அக்‌ஷரா ஹாசன் அதிரடி!

நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆன விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆன விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை அக்‌ஷராஹாசன் கடந்த 2015- ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார். அதே வேளையில் அவர் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கமல் ஹாசன் அரசியலில் பரபரப்பாக இயங்கி வரும் சூழலில் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக இந்தப் புகைப்படம் பரப்பப்பட்டுள்ளதாக ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து  பதிலளித்திருக்கும் அக்‌ஷராஹாசன், ‘இந்தப் புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரத்தில் புகார் அளிப்பதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டு  வருகிறேன். இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.