கமல் படங்களில் தான் நல்ல இசையை கொடுத்தார் இளையராஜா: சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்!

 

கமல் படங்களில் தான்  நல்ல இசையை கொடுத்தார் இளையராஜா: சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்!

தன் படங்களை விட கமல் ஹாசன் படத்திற்கே இளையராஜா நன்றாக இசையமைத்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

சென்னை: என் படங்களை விட விட கமல் ஹாசன் படத்திற்கே இளையராஜா நன்றாக இசையமைத்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு திரைபிரபலங்களும், ரசிகர்களும் கலந்து கொண்டனர். நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘கலைகளில் சிறந்த கலை இசை. இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவனுடைய ஆசீர்வாதமும், நம்மை இயக்கும் சக்தியும் உண்டு.

rajini

இளையராஜா இசையின் சுயம்பு. முதல் படத்திலிருந்து இப்போது வரை இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் தொடர்கிறது. இளையராஜா திரைத்துறைக்காக பெரும் தியாகம் செய்தவர். என் படங்களை விட கமல் ஹாசன் படங்களுக்குத்தான் இளையராஜா நல்ல இசையமைத்திருக்கிறார்’ என்றார்.

அப்போது பேசிய இளையராஜா, ‘இவருக்கு நல்ல பாட்டு போடறதா கமல் சொல்வார். நான் யாரையும் பாத்து மியூசிக் போட்டதில்ல’ என்று பதிலளித்தார்.