கமல்ஹாசன் பிறந்தநாள்: உடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சி வேண்டுகோள்

 

கமல்ஹாசன் பிறந்தநாள்: உடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சி வேண்டுகோள்

கமல்ஹாசனின் பிறந்த நாளான இன்று உடல் உறுப்பு தானம் செய்து தெரிவிக்க மக்கள் நீதி மய்யம் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது

சென்னை: கமல்ஹாசனின் பிறந்த நாளான இன்று உடல் உறுப்பு தானம் செய்து தெரிவிக்க மக்கள் நீதி மய்யம் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், “இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்த தானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும்” என கமல்ஹாசன் வலியுறுத்தியிருந்தார்.

அதேபோல், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சமுதாயத்தின் மத்தியில் சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், #Resurrect என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சி உடல் உறுப்பு தான இயக்கத்தை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், கமல்ஹாசனின் பிறந்த நாளான இன்று உடல் உறுப்பு தானம் செய்து தெரிவிக்க மக்கள் நீதி மய்யம் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நம்மவர் அவர்களின் பிறந்த நாளான இன்று, புதிதாக பிறக்கவிருக்கும் தமிழ்நாட்டிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை, உடல் உறுப்பு தானம் செய்து தெரிவிக்க வேண்டிய இணையதள முகவரி, https://www.mohanfoundation.org/donorcard.asp?from=mnmparty” என பதிவிட்டுள்ளது.