கமல்ஹாசன் சமாளிபிகேஷன்: எஸ்.வி.சேகர் சாடல்

 

கமல்ஹாசன் சமாளிபிகேஷன்: எஸ்.வி.சேகர் சாடல்

சபரிமலை விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்தை பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்

சென்னை: சபரிமலை விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்தை பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அங்கு பெண்களை அனுமதிக்காமல் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அண்மையில் கருத்து கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதிக்காததின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவே இல்லை என்பது உறுதியாகிறது. சபரிமலைக்கு நான் செல்லாததால் பக்தர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற முடியாது” என்றார்.

இந்நிலையில், கமலின் இந்த கருத்தை விமர்சித்துள்ள பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாளை இரண்டாம் குலோத்துங்க சோழன் பெயர்த்தெடுத்தபோது ஆவேசமாக எதிர்த்த    “ராமானுஜதாஸன்”  (தசாவதாரம்)படைத்தவன்,நடித்தவன்,என்ற உணர்வுடன் சொல்லியிருந்தால் சரியான கருத்து வந்திருகும். இப்படி மழுப்பத்தேவையிருக்காது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், “முல்லைப்பெரியார் பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லையே அது நினைவுக்கு வரவில்லையா பல நூற்றுக்கணக்காண உணர்வுகளை உள் வாங்கி திரையில் பிரபலித்த கலைஞனின் சமாளிபிகேஷன்” எனவும் எஸ்.வி.சேகர் குறிப்பிட்டுள்ளார்.