கமல்நாத் ராஜினாமா மக்களுக்கு கிடைத்த வெற்றி! – ஜோதிராதித்யா சொல்கிறார்

 

கமல்நாத் ராஜினாமா மக்களுக்கு கிடைத்த வெற்றி! – ஜோதிராதித்யா சொல்கிறார்

மத்தியப் பிரதேசத்தில் தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்துக் கொண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறினார் ஜோதிராதித்ய சிந்தியா. எம்.எல்.ஏ-க்கள் பெங்களுருவில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது. இந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கமல்நாத் தன்னுடைய முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

மத்தியப் பிரதேச முதல்வர் பதவியிலிருந்து கமல்நாத் விலகியிருப்பது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா சொல்லியுள்ளார்.

Kamal-Nath.jpg

மத்தியப் பிரதேசத்தில் தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்துக் கொண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறினார் ஜோதிராதித்ய சிந்தியா. எம்.எல்.ஏ-க்கள் பெங்களுருவில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது. இந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கமல்நாத் தன்னுடைய முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதை பா.ஜ.க தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியப் பிரதேசம் போபாலில் மட்டும் அதற்கு எதிராக பா.ஜ.க தலைவர்கள், தொண்டர்கள் ஒரே இடத்தில் கூடிக் கொண்டாடி வருகின்றனர்.

jyothirathiya

இந்த நிலையில் கமல்நாத் ராஜினாமா குறித்து ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “மத்தியப் பிரதேச மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நான் எப்போதுமே அரசியலை மக்களுக்கு சேவை செய்யும் ஒரு வழியாக நம்புகிறேன். ஆனால் இந்த அரசு அந்த பாதையை மாற்றிவிட்டது. உண்மை வெற்றி பெற்றுள்ளது. வாய்மையே வெல்லும்” என்று கூறியுள்ளார்.