கமலோடு விவேக் நடிக்கிறாரா?

 

கமலோடு விவேக் நடிக்கிறாரா?

கமல்ஹாசனுடன் நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: கமல்ஹாசனுடன் நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விவேக் ஐநூறு படங்களுக்கு மேலாக நடித்து முடித்து விட்டாலும் இன்னும் கமல்ஹானோடு நடிக்கவில்லை என்பது பெரிய குறையாக இருந்து வருகிறது. இந்தியன் 2 படத்தோடு கமல் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க இருப்பதால் இந்தக் கேள்வியை விவேக் என்கு சென்றாலும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி விவேக்கும் டயர்டாகிப் போனார். “

நான்  படிக்கும் போதே கமல்ஹாசனின் ரசிகன். 1975ம் ஆண்டு அபூர்வராகங்கள் வெளியாகும் போது நான் சாந்தோம் ஹை ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். பிறகு நான் நடிக்க வந்து பல ஆண்டுகளாகி விட்டது. இப்போதும் நான் கமல்ஹாசனின் ரசிகன் தான். ஆனால் நான் அவரோடு சேர்ந்து நடிக்காமல் இருப்பதற்கு கதைதான் செட் ஆகவில்லையென்பது என் கருத்து. இல்லாவிட்டால் ஷங்கர் என்னை அழைத்தால் நான் போய் நடிக்கப்போகிறேன். அதுவரைக்கும் இனிமேல் யாரும் பேசாமல் இருப்பது நல்லது” என்று கூறியிருக்கிறார். 

படிக்கும் பழக்கம் உள்ள விவேக் சமீபத்தில் வெ.இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா என்ற புத்தகத்தை படித்து விட்டு “பள்ளி மாணவர்கள் கட்டாயம் இந்தப் புத்தகங்களை படிக்க வேண்டும் அப்போதுதான் நம் மூளைக்குள் நடக்கும் மாற்றங்களையும் அதன் பயன்பாடுகளையும் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறி இறையன்பு அவர்களுக்கே போனில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்.