கமலை தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி!

 

கமலை தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்தை ஆதரிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்விக் கொள்கை குறித்தும், மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது என்றும் பேசினார்.

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்தை ஆதரிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

kappan

நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்விக் கொள்கை குறித்தும், மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது என்றும் பேசினார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து சூர்யாவின் பேச்சுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார்.

kappan

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் காப்பான் பட இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘ரஜினி புதிய கல்வி குறித்துப் பேசினால் மோடிக்கு கேட்கும் என்று கூறினார்கள். ஆனால் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். அவரின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன்பு தெரிந்தது’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார் படம் எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் அதிகரித்துள்ளது’ என்றார்.

rajini

சூர்யாவின் கருத்துக்கு நடிகர்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆதரவு கூறி வரும் நிலையில் பாஜக ஆதரவாளராகப் பார்க்கப்படும் ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.