கமலுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்?

 

கமலுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்2’ படத்தின் நாயகியாக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்2’ படத்தின் நாயகியாக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தை போலவே இரட்டை வேடங்களில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். அதற்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர் சில நிபந்தனைகள் விதித்ததால், அவருக்கு பதில் தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள காஜல் அகர்வாலை படக்குழு தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பி விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விஜய், அஜித், சூர்யா, போன்ற கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களின் நாயகியாக நடித்த காஜல் தற்போது சீனியர் நடிகர் கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.