கமலின் ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பார்ட் 2-வில் ஆரவ்?

 

கமலின் ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பார்ட் 2-வில் ஆரவ்?

உலகநாயகன் கமல்ஹாசன், சினேகா நடிப்பில் வெளியான ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன், சினேகா நடிப்பில் வெளியான ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சரண் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. மருத்துவத்துறையை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்புகளும் தெரிவித்தன. இருப்பினும் காமெடி டிராக்கில் ரசிகர்களை கவர்ந்தது.

vasoolrajambbs

இந்நிலையில், இயக்குநர் சரண் தற்போது ‘மார்க்கெட்ராஜா எம்பிபிஎஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் தாலிப்பை போலவே ஆரவ் நடிக்கும் படத்திற்கும் தலைப்பு வைத்துள்ளதால், இப்படம் ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இதனை இயக்குநர் சரண் மறுத்துள்ளார். இந்த படத்தின் கதைக்கும் ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

aarav

ஆரவ், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை காவ்யா, ராதிகா, நாசர், சாயாஜி ஷிண்டே, யோகிபாபு, சாம்ஸ், பாகுபலி புகழ் பிரபாகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க காமெடி டிராக்கில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ஆரவ் தரலோக்கல் டானாக நடிக்கவிருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.