கமலின் கொள்கை கம்யூனிஸ்ட் கொள்கை! அடுத்த தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும் தான் போட்டி- அர்ஜூன் சம்பத்

கமலின் கொள்கை கம்யூனிஸ்ட் கொள்கை! அடுத்த தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும் தான் போட்டி- அர்ஜூன் சம்பத்

கமல்ஹாசனின் கொள்கை கம்யூனிஸ்ட் கொள்கை  எனவே அவரின் வாக்கு வங்கி நிலையானது அல்ல  என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசனின் கொள்கை கம்யூனிஸ்ட் கொள்கை  எனவே அவரின் வாக்கு வங்கி நிலையானது அல்ல  என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 

விருதுநகரில் பெருந்தலைவர் காமராசரின் 117-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு காமராசர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜீன் சம்பத்
 மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிக்கும். 
 ரஜினியை யாரும் இழுக்க முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவார். அந்த தேர்தலில் ரஜினியா , ஸ்டாலினா ? யார் முதல்வராக போகிறார்கள் என்பதுதான் போட்டியாக இருக்கும். இதில் ரஜினி வெற்றி பெற்று முதல்வர் ஆவார். கமலின் ரசிகர்கள் மட்டுமே அவருக்கு வாக்களித்துள்ளனர். கமல்ஹாசனின் கொள்கை கம்யூனிஸ்ட் கொள்கை. 
அவரின் வாக்குவங்கி நிலையானது அல்ல, அது தேய்ந்து போகும் அது ஒய்ந்து போகக்கூடியது” என்று கூறினார்.