‘கமலாத்தாள் பாட்டிக்கு அரசு சார்பில் வீடு’: மாவட்ட ஆட்சியர் உறுதி!

 

‘கமலாத்தாள் பாட்டிக்கு அரசு சார்பில் வீடு’: மாவட்ட ஆட்சியர் உறுதி!

பசிக்காகச் செல்வோருக்குக் குறைந்த விலையில் உணவளித்து பசியை போக்கும் இந்த கமலாத்தாள்  பாட்டி  ஒரேநாளில் இணையத்தில் டிரெண்டானார்.

கோவை : ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு  அரசு சார்பில் வீடு வழங்கப்படவுள்ளது. 

கோவை மாவட்டம் ஆலாந்துறை – வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள் என்ற 85 வயது மூதாட்டி. தள்ளாடும் வயதிலும்  இட்லி வியாபாரம் செய்து வரும் இவர்  தானே  உரலில் மாவாட்டி இட்லி சுட்டு வெறும் ஒரு ரூபாய்க்கு அந்த இட்லியை விற்கிறார். பத்து வருடங்களுக்கு முன்புவரை இட்லி ஒன்றை ஐம்பது பைசாவுக்கு விற்றிருக்கிறார். பசிக்காகச் செல்வோருக்குக் குறைந்த விலையில் உணவளித்து பசியை போக்கும் இந்த கமலாத்தாள்  பாட்டி  ஒரேநாளில் இணையத்தில் டிரெண்டானார். கமலாத்தாள் பாட்டியை பலரும் பாராட்டி மகிழ்ந்தார்கள். 

kamalathal

இதையடுத்து  கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கமலாத்தாள் பாட்டியை நேரில் சந்தித்து அவரை பாராட்டி பரிசு வழங்கியதோடு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் என்று கூற அதற்கு கமலாத்தாள் எதுவும் வேண்டாம் என்று கூறி மறுத்துள்ளார். 

kamalathAL

இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர், கமலாத்தாள் மூதாட்டிக்கு  `பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்’ கீழ் அவருக்கு வீடு கட்டித்தருவதாக உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கமலாத்தாள் பாட்டி 30 வருடங்களாகக் குறைந்த விலையில் பசியாற்றுகிறார். அவருக்கு உதவி செய்யப் போனாலும் கண்டிப்புடன்  மறுக்கிறார். இருந்தும், அவரைக் கௌரவிக்கும் வகையில் அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும்” என்றார்.