கமகம மசாலா சட்னி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க

 

கமகம மசாலா சட்னி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க

விதவிதமான சட்டினிகள் செய்தாலும் சில பேருக்கு எல்லா நேரமும் எல்லா சட்டினிகளும் இருந்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிப்பார்கள்.

விதவிதமான சட்டினிகள் செய்தாலும் சில பேருக்கு எல்லா நேரமும் எல்லா சட்டினிகளும் இருந்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிப்பார்கள். அவசர அவசரமாக அலுவலகத்திற்குக் கிளம்பும்போது, அல்லது வேலை முடிந்து லேட்டாக வீட்டுக்கு வரும்போது சிம்பிளாகவும் சுவையாகவும் சட்டினி செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆகச்சிறந்த சட்டினி இது. சரி கமகம மசாலா சட்னி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :
 
வெங்காயம் – 2
தக்காளி – 1
கேரட் -1
முட்டைக்கோஸ் – 1/2 கப் 
தேங்காய் – 1/2 கப் 
கொத்தமல்லி – 1 கொத்து
புதினா  – 8 இலை
கருவேப்பிலை – சிறிதளவு
புளி – தேவையான அளவு
கடுகு
உ.பருப்பு
மிளகாய் வற்றல் – 5
பெருங்காய தூள்
உப்பு – தேவையான அளவு

chtney

 
செய்முறை:

 
ஒரு கடாயில் எண்ணெய்யை காயவைத்து ,கடுகு ,உ.பருப்பு ,மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காய துளை நன்கு தாளிக்கவும். பிறகு வெங்காயம் ,கேரட் மற்றும் முட்டைகோஸை நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி, தேங்காய் ,புதினா, கொத்தமல்லி, புளி, உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி ஆறியபின் அரைக்கவும்.

சுவையான மசாலா சட்னி ரெடி!

chutney

இதையும் படிங்க: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஆர்கானிக் கேரட் ஜூஸ்!