கன மழைக்கு வாய்ப்பு… 3 மாவட்டங்கள் மற்றும் வட இலங்கைக்கு எச்சரிக்கை!

 

கன மழைக்கு வாய்ப்பு… 3 மாவட்டங்கள் மற்றும் வட இலங்கைக்கு எச்சரிக்கை!

குமரிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, தென் மாவட்டங்கள் மற்றும் இலங்கையில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் இருந்தது. ஆனால், தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சென்னை உள்பட தமிழக கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

mansoon

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. அத்தோடு, அடுத்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களில் கன மழையும், ஆறு மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், இலங்கையின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்திலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. 

harbor

இலங்கையின் வடக்கு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பல ஏரிகள் நிரம்பிவிட்டதாகவும், சில குளங்கள் உடையும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.