கன்னியாகுமரி மாவட்டத்தில் அராஜகம்; 45, 000 சிறுபான்மையினர்கள் வாக்களிக்க முடியவில்லை

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் அராஜகம்; 45, 000 சிறுபான்மையினர்கள் வாக்களிக்க முடியவில்லை

ஒக்கி புயல் பாதிப்புக்கு சரியான நடவடிக்கை எடுக்காததால், குமரி மீனவ மக்கள் மத்திய பாஜக மீதும், அதிமுக அரசின் மீதும் கடும் அதிருப்தியில் இருந்தனர். அந்த பகுதியில் உள்ள பெரும்பான்மையான மீனவர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 45,000 சிறுபான்மையினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒக்கி புயல் பாதிப்புக்கு சரியான நடவடிக்கை எடுக்காததால், குமரி மீனவ மக்கள் மத்திய பாஜக மீதும், அதிமுக அரசின் மீதும் கடும் அதிருப்தியில் இருந்தனர். அந்த பகுதியில் உள்ள பெரும்பான்மையான மீனவர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

xzvzfv

இந்துத்துவத்தை நிலைநாட்ட விரும்பும் பாஜக, அம்மக்களை ஒக்கி புயல் பிரச்சனையிலேயே வஞ்சித்தது. இந்தமுறை அந்த மக்கள் தங்களுக்கு எப்படியும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, அம்மக்களின் பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கியிருக்கின்றனர்.

ccvcx

இராணுவத்தில் உள்ளவர்கள், வெளிநாட்டில் வேலை செய்யும் நபர்கள் யார் என்பதையும் வார்டு வாரியாக கணக்கிட்டு அதிகாரிகள் மற்றும் காவல்துறை உதவியுடன் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள்! இனயம், முட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், சுமார் பத்தாயிரம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை இழந்திருப்பார் என கூறப்படுகிறது.

இதையும் வாசிக்க: பெங்களூருவில் கனமழை; 3 பேர் பலி!