கன்னியாகுமரி தொகுதியில் எச். வசந்தகுமார்; சோகத்தில் மோடி, குஷியில் எடப்பாடி பழனிசாமி?!

 

கன்னியாகுமரி தொகுதியில் எச். வசந்தகுமார்; சோகத்தில் மோடி, குஷியில் எடப்பாடி பழனிசாமி?!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச். வசந்தகுமாரை வேட்பாளராக அறிவித்ததில் சிக்கல் எழுந்துள்ளது.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச். வசந்தகுமாரை வேட்பாளராக அறிவித்ததில் சிக்கல் எழுந்துள்ளது.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருப்பவர் எச். வசந்தகுமார். கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்த வசந்தகுமாரை அத்தொகுதியில் நிறுத்தியுள்ளது காங்கிரஸ் மேலிடம். கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வசந்தகுமார், ஒரு லட்சத்து சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் பொன். ராதாகிருஷ்ணனிடம் தோற்றுப் போனார். ஆனால் இந்தமுறை திமுக கூட்டணியில் களம் காண்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் மோடி தரப்பு சோகத்தில் இருக்கிறது!

வசந்த்

கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் வெற்றிபெற்றால், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்படும். ஏற்கனவே 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. இதில் வசந்தகுமார் ராஜினாமா செய்தால், 23 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி, தோல்வியை பொறுத்தே வசந்தகுமார் முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது. 

வசந்த்

எடப்பாடி பழனிசாமி தரப்பு கணிசமான இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையை தக்க வைத்தால், வசந்தகுமார் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார். மோடி ஆட்சியை கலைக்க வசந்தகுமார் ஆதரவு தேவைப்பட்டால், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார், அப்படியானால் எடப்பாடி தரப்புக்கு குஷிதான்.

பொன்

ஒருவேளை கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன். ராதா கிருஷ்ணன் வெற்றிபெற்றால், இதுபற்றி எல்லாம் நாம் யோசிக்க தேவையில்லை.